பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அந்த பெண் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காணாமல் போன பெண்ணை காவல் துறையினர் கண்டுபிடித்து இன்று அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தனர்.
மேலும் காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் ஒப்படைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார்.