தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், இரண்டு புறமும் தடுப்பு கட்டைகள், காளை மற்றும் காளையர்களுக்கு காயம் ஏற்படாத வண்ணம் தரையில் தேங்காய் நார் அமைத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படியும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க :அரசுப் பள்ளியில் 'அட்சய பாத்திரம்' திட்டம் தொடக்கம்