பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (50). இவர் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சரவணனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.