பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் வயலில் அறுவடை செய்யப்பட்ட 200 கிலோ சின்ன வெங்காயத்தை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வயலுக்கு வந்த ராஜா, சின்ன வெங்காயம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறை, திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்