கோடைக் காலத்தில் நகரம் முழுவதும் குறைவான நேரமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவரும் நிலையில், நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமப்புற பகுதிகளில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ஏ.எஸ். பேட்டை பகுதிகளில் குடிநீர் குழாயிலிருந்து நீர் வெளியேறி வீணாகிறது. கோடைக்காலத்தில் குறைந்த நேரமே விநியோகம் செய்யப்படும் குடிநீரானது, தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் குடிநீர் குழாயிலிருந்து வெளியேறி வீணாகி கழிவுநீர் வாய்க்காலில் கலக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.