ETV Bharat / state

இ-பாஸ் இன்றி வருபவர்கள் மீது வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 8, 2020, 10:24 PM IST

நாமக்கல்: இ-பாஸ் இல்லாமல் நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மீது கட்டாயம் வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று( ஜூலை 8) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டை பார்வையிட்டார்.

மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனா சிறப்பு வார்டை மீண்டும் தயார் நிலைக்கு கொண்டு வருவது குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஆட்சியர் மெகராஜ் "நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டை தயார்படுத்துவது குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இ பாஸ் உள்ளிட்ட எவ்வித அனுமதியும் இல்லாமல் நாமக்கல் மாவட்டத்திற்குள் வந்ததாக இதுவரை ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைபவர் மீது கட்டாயம் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.

மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 750 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது மாவட்டத்தில் 19 தனிமைப்படுத்தும் முகாம்கள் உள்ளன. மாவட்டத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.