ETV Bharat / state

இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வு

author img

By

Published : Sep 7, 2019, 6:37 AM IST

நாமக்கல்: இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வுசெய்யப்பட்டு மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக விருது தரப்பட்டுள்ளது.

"இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வு"

நாமக்கல் மாவட்டத்தில் 2014 - 2015ஆம் ஆண்டின் கணக்கு எடுப்பின்படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 867 ஆக இருந்தது. இந்நிலையில் 2017-2018ஆம் ஆண்டில் "பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் உதவியோடு, பெண் குழந்தைகள் கருவிலேயே களைக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால், 2018 - 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 935 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் மாவட்டமாக, நாமக்கல் தேர்வு செய்யப்பட்டது.

இதை பாராட்டும் விதமாக மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திற்கு விருது வழங்கினார்.

Intro:இந்தியாவிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பிற்காக நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. Body:இந்தியாவிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பிற்காக நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் பெற்றார்

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் 2014 - 2015 ஆம் ஆண்டில் 867 ஆக இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 2017 - 2018 இல் மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம்" திட்டத்தில் சுகாதாரத்துறை, சமூகநலத்துறை,பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் பெண் குழந்தைகளை கருவிலேயே களைத்தலை தடுப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பெண் குழந்தைகளை பெற்ற தம்பதியினருக்கு பெண்குழந்தைகளை வளர்ப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை மூலமாக 2018 - 2019 பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் 935 உயர்ந்துள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் உயர்ந்து வருவதை பாராட்டும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியத்திற்கு மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக இன்று டெல்லியில் விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதுனை வழங்கினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.