ETV Bharat / state

டீசல் விலை, சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் - etvbharat

டீசல், சுங்கக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் நேற்று (ஜூலை 21) அறிவித்தது.

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம்

author img

By

Published : Jul 22, 2021, 9:49 AM IST

நாமக்கல்: உயர்ந்துவரும் டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று (ஜூலை 21) நடைபெற்றது.

இதில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கோபால் நாயுடு, பொதுச்செயலாளர் ஜி.ஆர். சண்முகப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டது.

டீசல் விலை உயர்வு

பின்னர் ஜி.ஆர். சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக நாட்டில் மொத்தம் 26 லட்சம் லாரிகளில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மட்டுமே தற்போதைய நிலையில் இயங்கி வருகின்றன. டீசல் விலை 220 விழுக்காடு உயர்ந்துள்ளது".

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம்

"இவை தவிர்த்து வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும்".

மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை

"அதேபோல் சுங்க கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இவை தவிர்த்து மாநில அளவிலான கோரிக்கைகளை அந்தந்த மாநில முதலமைச்சர்களிடம் கோரிக்கைகளாக அளித்துள்ளோம்".

எங்களுடைய கோரிக்கைகளை ஆகஸ்டு 9ஆம் தேதிக்குள் பரிசீலிக்க விட்டால் அவசரக் கூட்டத்தைக் கூட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்போம் என மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்" என சண்முகப்பா தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.