நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாட்டுவண்டி ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் நாள்தோறும் மணல் கடத்தப்படுகிறதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் காவிரி கரையோர கிராமங்களில் மணல் திருட்டு நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மேல்சாத்தம்பூர் ராமதேவம், திருமணிமுத்தாறிலும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்திலும் சுமார் 20 அடி ஆழம்வரை தோண்டி எடுத்து மணல் திருடப்பட்டுவருவதாக நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி சின்ராஜுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேல்சாத்தம்பூர் பகுதியில் எம்.பி. திடீர் ஆய்வு செய்தார்.
மணிசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் டிப்பர் லாரிகள், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
பின்னர் சின்ராஜ் மேற்கொண்ட ஆய்வில், மணல் சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்ட மணல் மேல்சாத்தம்பூதிருமணிமுத்தாறு பகுதிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்திலிருந்து சுமார் 20 அடி ஆழம்வரை தோண்டி எடுத்துக்கொண்டு வரப்பட்ட மணல் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மணல் திருட்டு குறித்து வருவாய்துறை அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும்படி திமுக எம்.பி. அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்