ETV Bharat / state

'மது விலக்கு எங்களால் மட்டுமே சாத்தியம்..!' - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை பேச்சு! - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மது விலக்கு பாமக ஆட்சியில் மட்டுமே சாத்தியம் என்று பாமகவின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

’மது விலக்கு எங்களால் மட்டுமே சாத்தியம்..!’ - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : May 2, 2022, 7:47 PM IST

மயிலாடுதுறை: பேச்சாவடி பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பாமக மாவட்டச்செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், 'தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பள்ளிவளாகத்திலேயே எளிதாக கிடைப்பதாகவும் , இதற்கு காவல் துறையும் உடந்தையாகச் இருப்பதாகவும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்' கேட்டுக் கொண்டார்.

10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்: மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கென தனிக்கவனம் செலுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார். மருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், நீட் பயிற்சி சென்டர்கள் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மாணவர்களிடமிருந்து கொள்ளை அடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் , பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடத்தி மற்ற மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்தக் கல்வி ஆண்டிற்குள் 10.5% இட ஒதுக்கீடு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நெய்வேலி என்எல்சியில் கடந்த ஆண்டு லாபம் மட்டும் ரூ.11,000 கோடி என்றும்; ஆனால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை என்றும்; கடலூர் மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் எதற்கு இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

’மது விலக்கு எங்களால் மட்டுமே சாத்தியம்..!’ - அன்புமணி ராமதாஸ்

மதுவிலக்கு எங்களால் மட்டுமே சாத்தியம்: பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம் என்றும், அமைச்சர் துரைமுருகனின் வாக்கு பலிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மதுவிலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் எனவும் அப்போது கூறினார்.

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து மனிதர்கள் தூக்குவதற்கு தடை விதித்தது குறித்து பதிலளிக்கையில், ’நம் முன்னோர்கள் கடைப்பிடிக்கக் கூடிய சில மரபு வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். இதில் எந்தத் தடையும் யாரும் விதிக்கக் கூடாது. நமக்கு உரிய சில கலாசாரம் மற்றும் பாராம்பரியங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாமக, வன்னியர் சங்கம் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.