மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜானகி (72). இவர் கழுத்து அறுக்கப்பட்டு கடந்த 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த பத்து சவரன் நகை காணாமல்போனது.
இந்த வழக்கில் மணல்மேடு காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு (45) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மனஉளைச்சலுடன் வீடு திரும்பிய அய்யாவு தற்கொலையால் உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அய்யாவு நேற்று (டிச.28) மாலை உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து, மணல்மேடு காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அய்யாவு குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உயிரிழந்த அய்யாவுக்கு கண்ணகி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: குளத்தில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு!