ETV Bharat / state

தேமுதிக வாக்குகள் இரட்டை இலையில் பதிவான விவகாரம் - நாளை மறுவாக்குப்பதிவு - கூழையார் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு

நாகை: சீர்காழி அருகே கூழையார் வாக்குச்சாவடியில் தேமுதிக கட்சி சின்னத்திற்குப் பதில் அதிமுக சின்னத்தில் வாக்களிக்கப்பட்டதால், அங்கு தேர்தல் ரத்துசெய்யப்பட்டு நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேமுதிகவிற்கு பதில் அதிமுகவிற்கு வாக்களிக்கப்பட்டதால் நாளை மறுவாக்குப்பதிவு
தேமுதிகவிற்கு பதில் அதிமுகவிற்கு வாக்களிக்கப்பட்டதால் நாளை மறுவாக்குப்பதிவு
author img

By

Published : Dec 29, 2019, 1:35 PM IST

தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வேட்டங்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 660 வாக்குகள் பதிவாகின.

முரசு சின்னத்தில் தேமுதிக கட்சி வேட்பாளர் ஜலபதி போட்டியிட்டார். கடைசி நேரத்தில் பதிவான 50 வாக்குச் சீட்டுகளில் தேமுதிக சின்னத்திற்குப் பதில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயரிடம் தேமுதிக வேட்பாளர் ஜலபதி மற்றும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.

தேமுதிக சின்னம் மாறியதால் மறுவாக்குப்பதிவு

தேமுதிக வேட்பாளரின் சின்னம் இல்லாமல் வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளதால், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 20ஆவது வார்டுக்கான ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு 30.12.2019 அன்று மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

மேலும் பார்க்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை பறிப்பது யார்..? - அலசும் ஈடிவி பாரத் தமிழ்நாடு!

Intro:சீர்காழி அருகே கூழையார் வாக்குசாவடியில் 20வது வார்டில் தேமுதிக வேட்பாளரின் முரசு சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் தேர்தல் ரத்துசெய்யப்பட்டு வருகின்ற 30ம்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவின் நாயர் உத்தரவு:-Body:தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் நேற்று நடைபெற்று முடிந்தது. கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வேட்டங்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 660 வாக்குகள் பதிவாகின. முரசு சின்னத்தில் தேமுதிக கட்சி வேட்பாளர் ஜலபதி போட்டியிட்டார். கடைசி நேரத்தில் பதிவான 50 வாக்கு சீட்டுகளில் தேமுதிக சின்னத்திற்கு பதில் அதிமுக இரட்டைஇலை சின்னம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரவின் நாயரிடம் தேமுதிக வேட்பாளர் ஜலபதி மற்றும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். தேமுதிக வேட்பாளரின் சின்னம் இல்லாமல் வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளதால் இந்த கூழையார் கிராமத்தில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 20வது வார்டுக்கான ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு 30.12.2019 அன்று மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.