நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த அய்யூர் கிராமத்தில் பிறந்த சில நாள்களே ஆன பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் குளக்கரையேரம் வீசி சென்றுள்ளனர். குளத்தின் அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தை குளக்கரையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையை குளக்கரையோரம் வீசி சென்றவர்கள் குறித்து திருக்குவளை காவல் துறையினர் வழங்க பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் தற்கொலை முயற்சி - தாய் உயிருடன் மீட்பு - 2 குழந்தைகள் உயிரிழப்பு