ETV Bharat / state

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

Velankanni Church: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 10:51 AM IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா

நாகப்பட்டினம்: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் இயேசு பிறப்பு தினமான கிறிஸ்துமஸ் விழா கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்லும் சுற்றுலா தளமாக விளங்கும் இந்த புனித ஆரோக்கிய மாதா பேராலயம் இந்திய கிறிஸ்துவ ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பஸிலிக்கா’ என்ற சிறப்பு அந்தஸ்து பெற்று விளங்குகிறது.

வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை இயேசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை இயேசு பிறப்பின் போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாளை காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாகூர் கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.