ETV Bharat / state

'நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்'

author img

By

Published : Oct 13, 2019, 5:28 PM IST

நாகப்பட்டினம்: நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆங்கிலவழி பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில வழி பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆங்கில வழி பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பேட்டி

பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், "நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அரசின் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இருகல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தொகை ரூ.650 கோடியை இந்த ஆண்டு வழங்குவதாக அறிவித்தபடி அரசு வழங்க வேண்டும்'' என்றார்.

இதையும் படியுங்க: சிங்கத்துக்கே பயம் காட்டிய சிங்கக் குருளை...! - வைரல் காணொலி

Intro:அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 2017-18, 2018-19 ஆகிய 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.650 கோடியை, அரசு அறிவித்தபடி இந்தாண்டு வழங்க வேண்டும். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பேட்டி:-
Body:நாகை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அரசு துவக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவது போன்று, நர்சரி, பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும், அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண தொகை ரூ.650 கோடியை இந்த ஆண்டு வழங்குவதாக அறிவித்தபடி அரசு வழங்க வேண்டும், அரசு ஒரு மாணவனுக்கு 30 ஆயிரம் செலவு செய்கிறது. தனியார் பள்ளிகளுக்கு அரசு ஆணைப்படி தரவேண்டிய ரூ.11956ஐ வழங்காமல் ரூ.6ஆயிரம் மட்டும் தருகிறார்கள். மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என அரசு ஆணை வெளியிட வேண்டும் என்றார்.

பேட்டி: கே.ஆர்.நந்தகுமார் (தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்)Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.