ETV Bharat / state

ஏன் தாடி வளர்க்கிறேன் - ரகசியத்தை உடைத்த நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார் தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்பது குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சரத்குமார்
சரத்குமார்
author img

By

Published : Aug 30, 2021, 11:16 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம், "எப்போதும் பளபளவென ஷேப் செய்து பளீச்செனக் காட்சியளிக்கும் நீங்கள் ஏன் தற்போது தாடியுடன் உலா வருகிறீர்களே, இந்தத் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் என்ன" எனக் கேள்வி கேட்கப்பட்டது.

சரத்குமார்

அதற்குப் பதிலளித்த சரத்குமார், "மணிரத்னம் படத்தில் தற்போது நடித்துவருகிறேன். அந்தப் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. அதற்காகவே தாடி வளர்த்துள்ளேன். மேலும் நான் நடிகனாக மட்டும் இருக்கிறேன். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

தமிழில் ருத்ரன் படத்தில் நடித்துவருகிறேன். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது காலில் காயம் ஏற்பட்டது. ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டுமென்றனர். ஆனால், ஒரு வாரத்தில் நான் பணிக்குச் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நின்றுவிடக் கூடாது என்ற மன தைரியத்துடன் மருத்துவர் ஆலோசனையுடன் நடித்தேன்.

உடல் பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதைக் கடைப்பிடித்துவருவதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கோடநாடு கொலை வழக்கு விசாரணை செய்வதில் தவறில்லை' - சரத்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.