மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் பாலாஜி. உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவன் தனது நோட்டில் ஒரு கடிதம் ஒன்றை பெற்றோருக்கு எழுதி வைத்திருந்தை அறிந்த பெற்றோர் அந்த கடிதத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அந்த கடிதத்தில் தான் படிக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக ரவி என்பவர் பணியாற்றி வருவதாகவும், பள்ளி நேரம் தவிர மாலை நேரங்களில் கணித பாடத்திற்கு அவரது வீட்டில் டியூசன் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மாணவன் டியூசன் சென்று படித்துவிட்டு வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகும் என்பதால் டியூசனுக்கு வர முடியாத நிலையில் இருந்தாகவும், கணித பாடத்திற்கு தன்னிடம் டியூசன் வந்து படிக்க அடிக்கடி இந்த மாணவனை ரவி ஆசிரியர் திட்டி வந்தாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்த தினத்திற்கு முன்தினம் சனிக்கிழமையன்று சக மாணவ மாணவிகள் முன்பு மாணவன் பாலாஜியை வழக்கம் போல் கடுமையாக திட்டியதால் மன உளைச்சலில் இருந்த மாணவன் தன் சாவிற்கு ஆசிரியர் ரவி தான் காரணம், என அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:
சுறாவை எதிர்கொண்ட 7 வயது சிறுவன் - நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!