மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்போது சில பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவமனை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 20 விதிமுறைகளை விதித்தும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவில், மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்... பொதுமக்களின் கருத்தை கேட்கும் அறநிலையத்துறை...