மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (24). மற்றும் அவரது சித்தி, யமுனா (35) இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லணை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.
இதையடுத்து அந்த கும்பல் விக்னேஷை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதனைத் தடுக்க முயன்ற யமுனாவை அந்தக் கும்பல் தாக்கியதில், யமுனாவுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டு, மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்கும் இரு பிரிவினர்களுக்கிடையே கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில், இளைஞரை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆறு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவடி அருகே கோழித் தகராறில் நிகழ்ந்த கொலை!