மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "தென்னக ரயில்வே கடந்த மே 17ஆம் தேதி அலுவலர்கள் தங்களுக்கு இடையே இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தான் உரையாட வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இதனை எதிர்த்து மிகப் பெரிய போராட்டங்கள் நடத்துவோம். அந்நிய ஆக்கிரமிப்பை விட மிக மோசமானது மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி. இதனை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம்" என்றார்.