துணை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா. இவரது தலைமையில் அமைக்கப்பட்ட தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இடைக்கால குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து அக்குழுவின் நியமனத்தை ரத்து செய்யவெண்டுமென தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்தரன் தலைமையிலான அமர்வு, தேனி மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அமைக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை ரத்து செய்வதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
மேலும் இடைக்கால நிர்வாகக் குழுவை சரியான சட்டப்படி நியமிக்கும் படியும், இடைக்கால குழு நியமிப்பது குறித்து ஆவின் நிர்வாகம் முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: வருமான வரி குறைக்கப்படுமா, பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன? - பொருளாதார நிபுணரின் சிறப்புப் பேட்டி