ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் பெரும்பான்மையை இழந்த அதிமுக!

author img

By

Published : Jan 4, 2020, 10:00 AM IST

கிருஷ்ணகிரி: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

AIADMK
AIADMK

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 3 பேரும், திமுக வேட்பாளர் 12 பேரும், அதிமுக வேட்பாளர் 7 பேரும், சுயேச்சையாக ஒருவரும் வெற்றிபெற்றனர். எனவே திமுக அதிமுகவை விட 5 இடங்கள் அதிகம் பெற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் அதிமுகவை பெரும்பான்மையை இழக்கச்செய்தது.

அதேபோல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிலும் திமுக 88 இடமும், அதிமுக 59 இடமும், பாஜக ஒரு இடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 20 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடமும், தேமுதிமுக 9 இடமும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இப்பதவியிலும் அதிமுக, திமுகவைவிட 19 இடங்கள் குறைந்து தன்னுடைய பெரும்பான்மையை கோட்டைவிட்டது.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நாளை சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம்!

Intro:கிருஷ்ணகிரி ஊர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையிலான பதவிகளில் கோட்டைவிட்ட அதிமுக!
Body:கிருஷ்ணகிரி ஊர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையிலான பதவிகளில் கோட்டைவிட்ட அதிமுக!

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. 23 மாவட்ட ஊராட்சி வார்டுக்குழு உறுப்பினர் பதவி இடமும் , 221 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடமும் கட்சி அடிப்படையில் நிரப்பப்பட தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 234 மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. அதிகபட்சமாக வார்டு எண் 8 இருக்கு 16 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஜனவரி 2 ஆம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலை தான் பயணிக்க முடிந்தது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், திமுகவைச் சேர்ந்த 12 பேரும், அதிமுகவைச் சேர்ந்த ஏழு பேரும், சுயேச்சையாக ஒருவரும் வெற்றி பெற்றனர்.

இதில் அதிமுகவை விட ஐந்து இடங்கள் அதிகம் பெற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக தனது பெரும்பான்மையை கோட்டை விட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக 59 இடமும், பாரதிய ஜனதா கட்சி ஒரு இடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 20 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் 9 இடமும், திராவிட முன்னேற்றக் கழகம் 88 இடமும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுகவை விட திமுக 19 இடங்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருப்பதால் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலிலும் தன்னுடைய பெரும்பான்மையை கோட்டை விட்டது அதிமுக.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.