கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பள்ளப்பட்டி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
குறிப்பாக, இஸ்லாமிய மக்களிடம் திமுகவிற்கு வாக்களிக்கும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.