கரூர் எம்.பி., ஜோதிமணி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கரோனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது நம்பிக்கை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர்.
அதுமட்டுமன்றி மூளை அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சைப் போன்ற உயிர்காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கு விரிவான காப்பீட்டுத் திட்டம் செல்லாது என தனியார் மருத்துவமனைகள் தெரிவிப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
இக்கட்டான நேரத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.
எனவே, அரசு தலையிட்டு இந்தத் திட்டத்தின்கீழ், வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணையையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவை சரியாகப்பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, மாவட்ட அளவில் குழு அமைத்து திட்டம் சரியாக முறைப்படுத்த கண்காணிப்பு நடத்திட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கியுடன் வீதியுலா - பொதுமக்கள் பீதி