ETV Bharat / state

அரசுப் பேருந்து - தனியார் வேன் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், தனியார் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

accident
author img

By

Published : Sep 26, 2019, 7:31 AM IST

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த காருடையாம்பாளையத்தில் தனியார் பேப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு தோகைமலைக்கு வேன் புறப்பட்டது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது வேன் மோதியது. பேருந்து மீது வேன் மோதியதில் சுமார் 100 அடி தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

அரசுப் பேருந்து - தனியார் வேன் மோதி விபத்து

இந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் பெரிய அளவில் சேதமடைந்தது. இதில் வேனில் பயணம் செய்த வீரப்பூர் பகுதியைச் சேர்ந்த சினேகா(19) என்பவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்து விபத்து குறித்து பரமத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி!

Intro:கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், தனியார் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பலி - 10க்கு மேற்பட்டோர் காயம்Body:கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், தனியார் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பலி - 10க்கு மேற்பட்டோர் காயம்

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த காருடையாம்பாளையத்தில் விக்டோரியா பேப்பர் போர்டு எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு தோகைமலைக்குப் புறப்பட்டது.

வேன் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதிய வேகத்தில் வேன் சுமார் 100 அடி தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

இதில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் பெரிய அளவில் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வீரப்பூர் பகுதியை சேர்ந்த சினேகா வயது19; பெண் ஒருவர் பலியானதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயத்துடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னகவுண்டன்பட்டி கோகிலா , வீரப்பூர் வெற்றிகவுண்டனூர் பிச்சமணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்து விபத்து குறித்து பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.