ETV Bharat / state

'டீ' குடிப்பது போல் வந்து 10 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடன் - திருடன்

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே தேநீர் கடை உரிமையாளரான பெண்ணை தாக்கி, பத்து சவரன் தங்க நகையை பறித்து சென்ற திருடனை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

theft
author img

By

Published : Jun 26, 2019, 7:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே அனந்தபத்மநாபபுரம் கிராமத்தில் ராஜலிங்கம், புஷ்பம் தம்பதியர் தேநீர் கடை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் புஷ்பம் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் புஷ்பத்திடம் தேநீர் கேட்டுள்ளார். அப்போது அந்த நபருக்கு தேநீர் கொடுப்பதற்காக புஷ்பம் கீழே குனிந்து கிளாஸை எடுக்க முயன்றுள்ளார்.

இந்த வேளையில் திடீரென்று புஷ்பத்தை கீழே தள்ளிய அந்த நபர், புஷ்பம் அணிந்திருந்த பத்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு ஓடியுள்ளர். பின்னர் கடையின் அருகில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்ப செல்ல முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட புஷ்பம் சத்தமிட அக்கம்பக்தினர் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்தத் திருடன் தான் வந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்திலேயே விட்டு தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற ஆரல்வாய்மொழி காவல் துறையினர், திருடன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தேநீர் கடைக்கு எதிரே உள்ள வீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்சியைக் கொண்டு தப்பியோடிய திருடனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே டீ கடையில் டீ குடிக்க வந்தது போல் நடித்து டீ கடை உரிமையாளரான பெண்ணை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த பத்து சவரன் தங்க நகை பறிப்பு. இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற திருடனை பொதுமக்கள் பிடிக்கும் போது தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம். Body:TN_KNK_02_26_WOMAN_FLUSH JEWELRY_SCRIPT_TN10005

எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே டீ கடையில் டீ குடிக்க வந்தது போல் நடித்து டீ கடை உரிமையாளரான பெண்ணை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த பத்து சவரன் தங்க நகை பறிப்பு. இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற திருடனை பொதுமக்கள் பிடிக்கும் போது தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே அனந்தபத்மநாபபுரம் கிராமத்தில் ராஜலிங்கம், புஷ்பம் தம்பதியர் டீ கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடையில் அதிகாலையில் தனியாக புஷ்பம் டீ விற்பனை செய்து கொண்டு இருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் டீ கேட்டுள்ளார். இதனையடித்து அந்த நபருக்கு டீ கொடுப்பதற்காக கடையில் நின்ற புஸ்பம் ( 55) கடையில் உள்ளே குனிந்து டீ கிளாஸை எடுக்க முயன்ற போது, அவரை கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் கிடந்த பத்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்க செயின்களை பறித்து கொண்டு தான் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்ப செல்ல முற்ப்பட்டான் இதனை கண்ட புஷ்பம் சத்தம் போடவே அக்கம்பக்தினர் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றனர். இதில் திருடன் தான் வந்த இருசக்கர வாகனத்தை டீ கடை முன்பு போட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலிஸார் திருடன் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் டீ கடைக்கு எதிரே உள்ள வீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் திருடன் செயினை பறித்து சென்ற காட்சிகளை வைத்து திருடனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விஷுவல்- செயினை பறிகொடுத்த பெண். மற்றும் சிசிடிவி காட்சி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.