கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், சித்திரைப் பெருவிழாவின் நிறைவு நாளான இன்று, தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.