ETV Bharat / state

உணவுக்கு தலா ரூ.200 வசூல்; கரோனா நோயாளிகள் போராட்டம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவு, கபசுரக்குடிநீர், மாத்திரைகள், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை எனக் கூறி, தங்கும் அறைகளை விட்டு நோயாளிகள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Rs 200 per meal; Corona patients struggle!

author img

By

Published : Jul 25, 2020, 5:10 PM IST

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என கடந்த வாரம் கரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குமரி மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு மக்கள் நாள் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, தனியார் ஹோட்டல்கள் மூலம் தினசரி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 25) நாகர்கோவிலை அடுத்துள்ள ராஜாக்கமங்கலம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவர் விடுதியில் தங்க வைக்கபட்டுள்ள கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவு, கபசுரக் குடிநீர், மாத்திரைகள், குடிக்க தண்ணீர் கூட வழங்கவில்லை எனக் கூறி, நோயாளிகள் தங்கும் அறைகளை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்குகிறோம் என அரசு தரப்பில் அறிவித்துள்ள நிலையில், அங்கு உணவுக்கு தலா ஒருவருக்கு ரூ.200 கேட்பதாக கரோனா நோயாளிகள் குற்றஞ்சாட்டினர். நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இதையும் படிங்க: இன்று 81ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.