குமரி மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது0மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துவருகின்றனர். காவல் துறையினரும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குமரி மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தபட்சம் தலா 100 பேருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று (ஏப். 11) ஒரேநாளில் குமரி மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் ஆயிரத்து 780 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 6618 பேருக்கு கரோனா!