கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ம.வடக்கு தாங்கல் கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், நியாயவிலைப் பொருள்களை வாங்க, அக்கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தாண்டியிருக்கும் மணலூர்பேட்டை நியாயவிலைக் கடைக்கே சென்றுவர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், மக்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, ம.வடக்கு தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டப்பட்டது.
ஆனால் இது நாள் வரை அந்தக் கட்டடம் திறக்கப்படவில்லை. இதனால் சிரமத்துக்குள்ளான அக்கிராம மக்கள் நியாயவிலைக் கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: மாணவியை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் - மாவட்ட ஆட்சியரிடம் மனு