சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட ஜீரஹள்ளி வனப்பகுதியிலிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட யானைகள் அங்குள்ள குட்டைக்கு வந்தன. யானைகளை பார்த்து கிராம மக்கள் இடையூறு செய்ததால் யானைகள் வழிதவறி வந்து மல்லன்குழி சோளக்காட்டில் புகுந்தன.
யானைகளைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிராம மக்கள் உதவியுடன் யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் கிராம மக்களை துரத்தியது. இதையடுத்து வனத்துறையினர் யானைகளை ஜீப்பில் ஹாரன் ஒலித்து துரத்தினர்.
தொடர்ந்து வனத்துறையினர் சுமார் ஆறு மணி நேரமாக யானைகளை வனத்துக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் விவசாயத் தோட்டம் வழியாக செல்வதால் மக்கள் நடமாட வேண்டாம் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், கிராமத்தை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ளதால் யானைகள் காட்டுக்குள் சென்றுவிடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்ணிவெடி - ஏமாற்றமடைந்த அலுவலர்கள்