பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு ஒயிட் சிமெண்ட் எனப்படும் சிமெண்ட்டை மக்கள் வாங்கி வெள்ளை அடித்துள்ளனர்.
ஆனால் அது சுவர்களில் ஒட்டாமல் வலுவிழந்து உதிர்ந்தது. இதனையடுத்து கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை சத்தியமங்கலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து கிளிஞ்சல் சுண்ணாம்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், "கடல் பகுதியிலிருந்து கிளிஞ்சல் வாங்கி அதனை வேகவைத்து நாங்கள் விற்பனை செய்துவருகிறோம். தினமும் நான்கு டன் கிளிஞ்சல் சுண்ணாம்பு உற்பத்தி செய்கிறோம். மக்கள் அனைவரும் பெயிண்ட், ஒயிட் சிமெண்ட் வாங்குவதைவிட கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். வாரச் சந்தைகளில் கிலோ 30 ரூபாய்க்கு விற்று ருகிறோம். இந்த ஆண்டு கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை சிறப்பாக இருக்கிறது" என்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!