ஈரோடு: நாடு முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழல்நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வுகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டக் காவல்துறையின் சார்பில் , 18 வயதுக்குக் கீழுள்ள பெண் குழந்தைகளை பாலியல் சீண்டலுக்குட்படுத்தினால் வழங்கப்படும் தண்டனை, பெண்கள், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது விதிக்கப்படும் தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி, விளையாட்டு உரிமைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
நமது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த மரியாதையை கொடுப்போமோ அதே மரியாதையை அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் பாதுகாப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவறி விழுந்த செல்போனை எடுக்க 60 அடி தண்ணீரை வெளியேற்றிய விவசாயி