ETV Bharat / state

52 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - Petition day camp at Kullumpalayam

ஈரோடு: குள்ளம்பாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாமில் 52 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பேச்சு
author img

By

Published : Sep 18, 2019, 3:08 PM IST

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் ஊராட்சியில் இன்று மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா 52 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறையின் சார்பில் சொட்டு நீர் மானியம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் உரங்கள், வருவாய்த் துறையின் சார்பில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

குள்ளம்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்

இம்முகாமில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தனர்.

நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, "நெகிழிப் பயன்பாட்டை பொதுமக்களும் விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து தடைசெய்ய வேண்டும், மழைநீர் சேகரிப்புத் தொட்டியை ஒவ்வொரு வீடுகளிலும் விவசாயத் தோட்டங்களிலும் அமைக்க வேண்டும், கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர்கள் விஜயகுமார், கணேசன், துணை வட்டாட்சியர் உத்திரசாமி, வருவாய் ஆய்வாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், சுகாதாரத் துறை அலுவலர்கள், தீயணைத் துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க:

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எம்எல்ஏ உறுதி

ஏழு நாட்களில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்: எம்எல்ஏ உறுதி

Intro:Body:பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பொதுமக்கள் தாங்களாகவே முனவந்து ஆதரவு அளிக்க, டி.ஆர்.ஓ கோரிக்கை

tn_erd_02_sathy_dro_camp_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாமில் 52 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரிக் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா 52 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை வோள்மைத்துறையின் சார்பில் சொட்டு நீர் மானியம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணூட்டங்கள் உரங்கள் வருவாய்துறையின் சார்பில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இம்முகாமில் பங்கேற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தனர். நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா சிறப்புரையாற்றுகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்களும் விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து தடைசெய்யவேண்டும் மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு வீடுகளிலும் விவசாய தோட்டங்களிலும் அமைக்கவேண்டும் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று எடுத்துரைத்தார். இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார்கள் விஜயகுமார் கணேசன் துணை தாசில்தார் உத்திரசாமி வருவாய் ஆய்வாளர் சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகாதாரத்துறை அலுவலர்கள் தீயணைத்துறை அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.