ETV Bharat / state

மநீம வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தொடங்கும் முன்னரே கலைப்பு!

திண்டுக்கல்: உரிய அனுமதி பெறாமல் நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தொடங்கும் முன்னரே காவல் துறையினரால் நிறுத்தப்பட்டது.

மக்கள் நீதி மய்யம்
author img

By

Published : Mar 23, 2019, 7:05 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிமுகப்படுத்தி, தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 21ஆம் தேதிவெளியானது. இதில், திண்டுக்கல் தொகுதிக்கான நாடாளுமன்ற வேட்பாளராக டாக்டர் சுதாகரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் அருகே தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டமும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு அங்கு குழுமியிருந்தனர். அப்போது, அங்கு வந்த காவல் துறையினரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தப்படுவது குறித்து விசாரித்தனர்.

இதனையடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டன. பின்னர், அனுமதியின்றி கட்சிக் கூட்டங்கள் தேர்தல் சமயங்களில் நடத்தக் கூடாது என அக்கட்சியினரை எச்சரித்த காவல் துறையினர், அங்கு குழுமியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.

முன்னதாக, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. எல்லாத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது என குற்றம்சாட்டிவந்த கமலின் கட்சியிலேயே சட்ட விதிகள் பின்பற்றப்படாமல் உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.