திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டியில் உள்ள அக்னிச் சிறகுகள் சமூக சேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அக்னிச் சிறகுகள் மைய நிறுவனர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் பூபாலன் கரோனா பெருந்தொற்று அறிகுறிகள், நோய் பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு கபசுர குடிநீர், மாஸ்க், பேனா, பென்சில், நோட்டு புத்தகம், மூலிகை செடிகள், மரக்கன்று உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னதாக அப்துல் கலாம் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த அறிவியல் கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, உடல் உறுப்பு மண்டலம், இயற்கை விவசாயம், மாணவ மாணவியரின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.