திண்டுக்கல்: நத்தம் பகுதியில் போலி மருத்துவர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நத்தம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை தலைமையில், நத்தம் காவல் ஆய்வாளர் சரவணன், மக்கள் நல்வாழ்வுத் துறை பணியாளர்கள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
போலி மருத்துவர்
அப்போது, நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்த குமார் (42), கோட்டையூரைச் சேர்ந்த மதினா (38), நத்தத்தைச் சேர்ந்த முருகேசன் (65), சாந்தி (50) ஆகியோர் முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதையடுத்து நான்கு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்!'