கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை.19) கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,026 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 13,500 கன அடி நீரும் என மொத்தம் 15,526 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. அதில் 18 ஆயிரம் கன அடி நீர் இன்று தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது.
தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பரந்து விரிந்து செல்கிறது.
மேலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவு 12,500 கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவக்காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை!