கர்நாடக மாநிலத்தில் பருவ மழையின் அளவு குறைந்ததன் காரணமாக, காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்தது.
அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைந்ததால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து எட்டாயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கே.எஸ்.ஆர் அணை முழுக் கொள்ளளவான 124 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் 41 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து ஆயிரத்து 500 கனஅடி நீரும், கர்நாடகா காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் இரு தினங்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் சில தினங்களில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.