பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் நான்கு நாட்கள் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

முதல்நாள் ஆர்ப்பாட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினர் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பேகராஹள்ளியில் பாமகவினர் கிராம நிர்வாக அலுவலரிடம் இடஒதுக்கீடு கோரி மனு அளித்தனர்.
தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினா் மனுக்களை அளித்தனா்.
திருவள்ளூர்:
இதேபோல், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாலர் பாலா என்கிற பாலயோகி தலைமையில் ஊர்வலமாக சென்று வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டி மனு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த வெலக்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'ராமதாஸ் அபகரித்த வன்னியர் அறக்கட்டளை சொத்தை சட்டப்படி மீட்போம்'