தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார். மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, மாவட்டத்தில், கிராம பகுதிகளில் 964 முகாம்கள், நகராட்சி பகுதிகளில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கபட்பட்டுள்ளன. அத்துடன், 18 நமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 100 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அரசு நகர ஆரம்ப சுகாதாரநிலையத்தில் தொடங்கிவைத்தார். மாவட்டத்தில், 87 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும், 582 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி : நெல்லையில் இன்று 1 லட்சத்து 34 ஆயிரத்து 669 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். சொட்டுமருந்து வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் 924 மையங்கள் அமைக்கப்பட்டு, 1714 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டுமருந்து முகாமில், சொட்டுமருந்து வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டுமருந்து வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும், 1221 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5 ஆயிரத்து 164 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல, 134 நகரும் போலியோ சொட்டு மருந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ராமநாதபும்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 1234 போலியோ சொட்டு மருந்து மையங்களில் 4912 பணியாளர்களை கொண்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 136 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதும் 27 சிறப்பு குழுக்கள், 33 நடமாடும் குழுக்கள் மருந்து வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ஆலிவர் தெரிவித்தார்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டதில் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கிவைத்தார். மாவட்டத்தில், கிராமபுறங்களில் 798 சிறப்பு மையங்கள், நகர்ப்புறங்களில் 72 சிறப்பு மையங்கள் என 870 மையங்கள் மூலம், 1 லட்சத்து, 17 ஆயிரத்து,612 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் இன்று தொடங்கிவைத்தார். இதற்காக மாவட்டம் முழுவதும் 806 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 2931 பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். 11 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 355 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். இந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதும்775 மையங்களில் 3,203 பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து!