தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 18 தினங்களாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட நிர்வாகம், அருவிகள், ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்தது.
கடந்த இரு தினங்களாக நீர்வரத்து குறைய தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், ஒகேனக்கல் கோத்திகள் பாறை வழியாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அருவிகள் மற்றும் ஆறுகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. காவிரி ஆற்றின் அழகை பரிசலில் சென்று ரசிக்க பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசே நாத்திகத்தை ஊக்குவிக்க முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி