தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்து முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). அவரது மனைவி வளர்மதி (38). இவர்களுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன.
வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம், வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டதோடு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வளர்மதி வெங்கடேசனை அருகிலிருந்த கடப்பாரையால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார். தகவலறிந்த காவல் துறையினர் வளர்மதியை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.