தர்மபுரி: மாவட்டம் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு தங்கவேல், பழனி, ராமமூர்த்தி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மாணிக்கம் தீர்த்தமலையில் உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஊழியம் செய்து வந்தார்.
அப்போது அவர் கோயிலுக்கு சொந்தமான செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் ஆகியவற்றை தனது வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார்.
மாணிக்கம் உயிரிழந்த பிறகு, அவைகள் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது அவரது மகன்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில், பழுதான வீட்டை சரிசெய்யும்போது மாணிக்கம் மகன்களுக்கு செம்பு பட்டயம், வீர வாள் கிடைத்துள்ளன.
அதனை அரூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் மாணிக்கம் மகன்கள் மறுத்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் செம்பு பட்டயம், வீர வாள் ஆகியவற்றை மாணிக்கம் மகன்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி