தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 32 மாவட்டங்களிலிருந்து மாநில பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல கோரிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் விடுக்கப்பட்டது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளுக்கும் மருத்துவ வசதி பெறும் வகையில் மாற்ற வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் ஆண்டுக்கணக்கில் தணிக்கை தடைகள் நிலுவை, நீண்டகால நிலுவை, ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக பணிநீக்க நடவடிக்கைகள் என அனைத்திற்கும் காலவரை நிர்ணயம் செய்து விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மாநாட்டில் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் நிம்மதியாகவே இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு