ETV Bharat / state

குப்பைக்குள் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண்கள் கைது! - Women who sell booze are jailed for one year

கடலூர்: சாராய வியாபாரம் செய்த வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சாராயம் விற்ற பெண்கள்
author img

By

Published : Oct 6, 2019, 11:41 PM IST

கடலூரில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அழகுபெருமாள் குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ரேவதி, அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி தமிழரசி (53) குப்பைக்குள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். இது தொடர்பாக தமிழரசி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வி. பெத்தாங்குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அந்த பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி செல்வராணி (45) குப்பையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர்கள் இருவரின் மீதும் மதுகடத்தல் தொடர்பாக 10 வழக்குகள் உள்ளன. எனவே இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் இருவரும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க:

வீட்டில் சாராயம் காய்ச்சிய நபர் அதிரடி கைது!

Intro:பெண் சாராய வியாபாரி இருவர் குண்டர் தடுப்புக் காவலில் கைதுBody:கடலூர்
அக்டோபர் 6,

கடலூரில் கடந்த சில நாட்களாக கள்ளசாராய விற்பனைநடைபெறுவதாக கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ரேவதி மற்றும் போலீசார் அழகு பெருமாள் குப்பம் பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமாக சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அதை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி தமிழரசி (53). சாராய வியாபாரியான இவர், தனது வீட்டின் எதிரே உள்ள குப்பைக்குள் 3 டிராக்டர் டியூப்பில் சுமார் 1,200 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழரசியை காவல் ஆய்வாளர் ரேவதி கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் தமிழரசி மீது ஏற்கனவே புதுப்பேட்டை காவல் நிலையம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு காவல் நிலையத்தில் மதுகடத்தல் தொடர்பாக 10 வழக்குகள் உள்ளன. எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் தமிழரசி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வி. பெத்தாங்குப்பம் பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமாக சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி செல்வராணி (45). சாராய வியாபாரியான இவர் தனது வீட்டின் பின்புறமுள்ள குப்பையில் இரண்டு பாலித்தீன் பைகளில் 110 லிட்டர் சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் செல்வராணி மீது நடுவீரப்பட்டு மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன.எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் தமிழரசி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.