பிரதம மந்திரியின் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், நெல், வாழை, பருத்தி, முந்திரி, கொய்யா உள்ளிட்ட விவசாய விளைபொருள்களின் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், இஐடி பாரி ஆலையில் லோக்கல் கரும்புக்கு உடனே கட்டிங் ஆர்டர் வழங்கவேண்டும், கழிவு என்ற பெயரில் ஒரு விழுக்காட்டுக்கும் மேல் பிடிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டனர்.