கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (45). கூலித் தொழிலாளியான இவர் வசிக்கும் அதே பகுதியில், 16 வயது சிறுமி ஒருவர் தனது மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அச்சிறுமியை ராமன் ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் ஆனார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், புவனகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய ராமனை, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.