ETV Bharat / state

வலது பக்கத்தில் இருதயம்; மரணத்தோடு போராடும் குழந்தையை காப்பாற்றுமா அரசு? - தமிழக அரசுக்கு கோரிக்கை

கடலூர்: வழக்கத்தை மீறி வலது பக்கம் உள்ள இருதயத்தால், பல்வேறு பிரச்னைகளோடு போராடும் 10 மாத குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை-விடுத்துள்ளனர்.

child
author img

By

Published : Jul 21, 2019, 7:29 PM IST

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பூமதிக்கு, 10 மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இடது பக்கம் இருக்க வேண்டிய இருதயம் குழந்தைக்கு வலது பக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

மேலும் உடலுக்குத் தேவையான ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் நான்கு குழாய் அறைகளில் ஒரு குழாய் மட்டுமே இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு என்பது இல்லை. குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு குழாய்; அறைகளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பிறந்த குழந்தைக்கு உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. மூன்று மாதம் கழித்து பின்னர் சிகிச்சை செய்யலாம். இதற்கான சிகிச்சை சென்னையில் உள்ள மருத்துவர்கள்தான் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சென்னையிலிருக்கும் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.7 முதல் ரூ.9 லட்சம் வரை செலவாகும் என்று தனியார் மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்களிடம் இவ்வளவு பணம் இல்லை என்று மனவேதனையுடன் அந்தப் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

தங்களுடைய குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் உதவி செய்ய வேண்டும் எனக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனிடம் மனு அளித்தனர். அதற்கு ஆட்சியர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும், அதற்கு ஒரு கடிதமும் பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி நடவடிக்கையை எடுத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோரிடம், பச்சிளம் குழந்தை என்பதால் தீவிர முயற்சி எடுத்து இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. குழந்தை நலப்பிரிவு மருத்துவமனைக்கு செல்லும்படி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மிகுந்த மனவேதனையுடன் பெற்றோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இருதய பிரச்னையால் குழந்தை அவதி

தற்போது அந்தக் குழந்தை ரத்த சுத்திகரிப்பு இல்லாமல் நாளுக்கு நாள் உடல் சோர்வு, சுவாசக்கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல இன்னல்களை சந்தித்துவருகிறது. மருத்துவத் துறையில் பல சாதனைகள் படைத்துவரும் தமிழ்நாடு அரசு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இருதய பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை-விடுத்துள்ளனர்.

Intro:இதயம் வலது பக்கத்தோடு பிறந்த குழந்தை -இதய ரத்த சுத்திகரிப்பு அறைகள் இல்லாதால் நாள் தோறும் இன்னல்களை சந்திக்கும் குழ்நதை -கடலூர்,புதுவை,சென்னை என பல மருத்துவர்களை அணுகியும் பலனில்லை -அரசு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை Body:கடலூர்
ஜீலை 21,

மனிதனின் இதயமானது இடது பக்கம்தான் இருக்கும் அதுதான் இயற்கையின் படைப்பு. ஆனால் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ,பூமதி தம்பதியினர். பாலாஜி கூடி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் குழந்தைக்கு வலது பக்கம் இருப்பதை கண்டறிந்தனர் .மேலும் உடலுக்கு தேவையான நல்ல ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் நான்கு குழாய் அறைகளில் இக்குழந்தைக்கு ஒரு குழாயில் மட்டுமே உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு என்பது இல்லை எனவே உடனடியாக குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு குழாய் மற்றும் அறைகளை மருத்துவ அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்த நாளிலே அங்கிருக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கும்படி கேட்டனர் ஆனால் பிறந்த குழந்தைக்கு உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது மூன்று மாதம் கழித்து பின்னர் சிகிச்சை செய்யலாம் என கூறியுள்ளனர் அதுவும் தங்களால் இயலாது சென்னையில் உள்ள மருத்துவர்கள் தான் இதனை செய்ய முடியும் என கூறியுள்ளனர்

இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருக்கும் பிரச்சினை குறித்து விளக்கி கூறியுள்ளனர் இதய அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமென்றால் அதிகம் செலவாகும் குறிப்பாக 7 முதல் 9 லட்சம் வரை செலவாகும் என தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளனர் இதனால் பணம் இல்லை எனக் கூறி அவர்கள் மனவேதனையுடன் சொந்த ஊருக்கு வந்து உள்ளனர்

பின்னர் தன் மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் உதவி செய்ய வேண்டும் எனக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து தங்கள் குழந்தையைக் காட்டி மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுள்ளனர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது இதய அறுவை சிகிச்சை சுலபமாக செய்து முடிக்கிறார்கள் அங்கு நீங்கள் செல்லுங்கள் அதற்கான கடிதத்தை நான் அனுப்புகிறேன் எனக்கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஒரு கடிதமும் குழந்தையின் பெற்றோர்கள் கையில் ஒரு கடிதமும் மாவட்ட ஆட்சியர் கொடுத்து நடவடிக்கை மேற்கொண்டார்

ஆனால் கடந்த வாரம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்கள் குழந்தையை சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தங்களால் முயற்சி எடுக்க முடியாது பச்சிளம் குழந்தை என்பதால் முயற்சி எடுத்து இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது நீங்கள் குழந்தை நலப்பிரிவு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறியதால் மனவேதனையுடன் எங்கு செல்வது யாரைப் பார்ப்பது என தெரியாமல் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தனர்

பிறந்து 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு கடலூர் புதுவை சென்னை ஆகிய பகுதிகளுக்கு மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களின் சந்தித்து இதுவரை யாராலும் குணப்படுத்த முடியாது அல்லது சிகிச்சை அளிக்க முடியாது மேலும் சிகிச்சை அளிக்க 9 லட்சம் பணம் வரை கேட்கிறார்கள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்

எனவே மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்து வரும் தமிழக அரசு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இதுபோல் பிரச்சனைக்கு மருத்துவத்துறை முன் வர மறுக்கிறது எனவே
தங்களில் குழந்தைக்கு இதயம் மாறி இருப்பதால் எந்தவித பிரச்னை இல்லை ஆனால் இதயத்தில் உள்ள இரத்த சுத்திகரிப்பு அறைகள் மட்டுமே இல்லை அதனை மட்டும் சிகிச்சை அளித்து குழந்தையை கைப்பற்றினால் போதும்.

தமிழக அரசு தங்கள் குழந்தை மீது கவனம் செலுத்தி குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்ற மருத்துவத் துறை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

மனித உடலில் உள்ள உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது. உடலுக்கு தேவையான நல்ல ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் முக்கிய பணி இதனுடையது. ரத்தத்தை சுத்திகரித்து அசுத்தங்களை கழிவுப் பகுதிக்கு அனுப்பிவிடும். உறங்கும் போது மூளை உள்பட மற்ற உறுப்புகள்கூட சில மணிநேரங்கள் ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்துக்கு ஓய்வு கிடையாது. 24 மணிநேரமும் ஒய்வின்றி இதன் பணி இருக்கும். அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக உள்ளது அனால் இந்த குழந்தைக்கு இரத்த சுத்திகரிப்பு இல்லாமல் நாளுக்கு நாள் உடல் சோர்வு,சுவாசக்கோளாறு,மூச்சு திணறல்,என உள்ளிட்ட பல இன்னல்களை சந்தித்து வருகிறது கூலி தொழிலாளியான பாலாஜி குழந்தை பிறந்தநாளில் இருந்து தினமும் சம்பாதிக்கும் 300 ரூபாய்யை அருகில் இருக்கும் மருத்துவர்களை சந்தித்து தற்போது குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வருகிறார் எனவே தங்கள் குழந்தைக்கு இருக்கின்ற பிரச்சனையை அரசு கவனம் செலுத்தி காக்க வேண்டும் என இவரது கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.