ETV Bharat / state

மீண்டும் மாட்டுச்சந்தை செயல்படுத்த சார் ஆட்சியரிடம் மனு..!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட பழமை வாய்ந்த மாட்டு சந்தையை மீண்டும் பொள்ளாச்சியில் செயல்படுத்த வேண்டுமென வியாபாரிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சியில் மாட்டுச்சந்தை கோரி மனு பொள்ளாச்சி மாட்டுச்சந்தை பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வியாபாரிகள் மனு Petition of Pollachi Cattle Dealers Petition to demand Cattle Market in Pollachi Pollachi Cattle Market
Petition of Pollachi Cattle Dealers
author img

By

Published : Jan 21, 2020, 9:44 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பழமை வாய்ந்த மாட்டுச்சந்தைதான். இந்த சந்தை மார்க்கெட் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்தது. இதன்மூலம் நகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு செயல்பட்டுவந்த மாட்டுச்சந்தை போதுமான இடவசதி இல்லாததாகக் கூறி திப்பம்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனால், அப்பகுதியில் மாட்டு சந்தையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த பழமை வாய்ந்த பொள்ளாச்சி மாட்டு சந்தையை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த வியாபாரிகள்

அந்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் திப்பம்பட்டியில் அனுமதியின்றி மாட்டுச்சந்தை நடத்தக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. அதையும் மீறி மாட்டுச்சந்தை அப்பகுதியில் செயல்பட்டுவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக மாட்டுச்சந்தையை பொள்ளாச்சியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:

தொடர் மழை எதிரொலி - ஈரோடு மாட்டுச் சந்தையில் விற்பனை சரிவு!

Intro:petitionBody:petitionConclusion:பொள்ளாச்சியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட பழமை வாய்ந்த மாட்டு சந்தையை மீண்டும் பொள்ளாச்சியில் செயல்படுத்த வேண்டுமென மாட்டுமேலும் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
பொள்ளாச்சி : ஜன- 21
பொள்ளாச்சி என்றாலே நினைவுக்கு வருவது பழமை வாய்ந்த மாட்டுச்சந்தை தான் இந்த சந்தை மார்க்கெட் ரோடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது இதன்மூலம் நகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு இருந்த மாட்டுச்சந்தை போதுமான இடவசதி இல்லாததாக கூறி திப்பம்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது இதனால் இங்கிருந்த மாட்டு சந்தையை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இறந்துள்ளதாகவும் எனவே பழமை வாய்ந்த பொள்ளாச்சி மாட்டு சந்தையை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் திப்பம்பட்டியில் அனுமதியின்றி மாட்டுச்சந்தை நடத்தக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியும் அதையும் மீறி மாட்டுசந்தை அப்பகுதியில் செயல்பட்டு வருவதாகவும் எனவே அதிகாரிகள் உடனடியாக ஆட்டுச்சந்தை பொள்ளாச்சியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பேட்டி-முருகானந்தம் (மாட்டு வியாபாரி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.